மதுக்கடைகளின் எண்ணிக்கை குறைக்க வேண்டும்- ராமதாஸ்

0
21

தமிழ்நாட்டில் முழு மதுவிலக்குதான் பாமகவின் கொள்கை ஆகும். அதே நேரத்தில் மதுக்கடைகளின் எண்ணிக்கையைக் குறைத்தும், மது வணிக நேரத்தைக் குறைத்தும் படிப்படியாக மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதற்கான முயற்சிகளையும் ஆதரிக்கிறோம். அவ்வகையில் மதுக்கடைகளின் எண்ணிக்கையை குறைப்பதைப் போன்றே, மது வணிக நேரத்தை குறைப்பதும் முக்கியமான நடவடிக்கை.

மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் ஆந்திரத்தில் அதிவேகத்தில் தொடங்கியுள்ள நிலையில் தமிழகத்திலும் அதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட வேண்டும் என்பது தான் அனைத்துத் தரப்பினரின் எதிர்பார்ப்பு ஆகும். எனவே, படிப்படியாக மதுவிலக்கை நடைமுறைப்படுத்தும் நடவடிக்கைகளின் ஒரு கட்டமாக குறைந்தது 500 மதுக்கடைகளை மூடவும், விற்பனை நேரத்தை நண்பகல் 12.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை என்ற அளவில் குறைக்கவும் அரசு முன்வர வேண்டும்.

தமிழகத்தில் முழுமையான மதுவிலக்கை ஏற்படுத்தி, ஒரு சொட்டு மது கூட இல்லாத, மகிழ்ச்சியான தமிழகத்தை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.