மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்தைத் தெரிவித்தார் பிரதமர்

0
50

கோலாலம்பூர்,  ஜூலை 13 – மலேசிய நாட்டின் பிரதமரான துன் டாக்டர் மகாதீர் முகமது  93 வயது நிரம்பிய தனது மனைவிக்குப் பிறந்தநாள் வாழ்த்தை  டுவிட்டர் மற்றும் முகநூல் வழியாக நேற்று தெரிவித்தார். தன் மனைவிக்கு தான் நன்றியைச் சொல்ல கடமைப்பட்டிருப்பதாக பிரதமர் கூறினார்.

“பல வேலைகள் காரணமாக அவருக்கு என்னால் நேரத்தை ஒதுக்க இயலவில்லை. இருந்தபோதும் எனக்காக அவர் நேரத்தை செலவிட்டும் என்னைப் பொறுத்துக் கொண்டு பொறுமையாக எல்லா விதமான ஆறுதலை வழங்கி வரும் அவருக்கு நான் நன்றி சொல்கிறேன். ” என வலைத்தளத்தில் பதிவிட்டு உலக மக்களின் ஈர்ப்பை பெற்றார் மகாதீர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.