மன்னிப்பு கோரினார் ஜாகிர் நாயக்

0
94

கோலாலம்பூர், 20 ஆகஸ்ட்- அண்மைய காலமாக மலேசியாவில் இன சர்ச்சையில் சிக்கிய ஜாகிர் நாயக் இஸ்லாம் அல்லாத மலேசியர்களிடம் மன்னிப்பு கோரினார். மேலும், அவர் கூறுகையில், தான் ஒரு இனவாதியல்ல மாறாக இனவாதியாக சித்தரிக்கப்படுவதாக அவர் கூறினார்.

தான் உலக அமைதி விரும்பி என்றும் அதுதான் இஸ்லாத்தின் நிலைப்பாடும் கூட என ஜாகிர் மேலும் வலுயுறுத்தினார். நேற்று புக்கிட் அமானில், சுமார் 10 மணி நேரம் விசாரிக்கப்பட்ட ஜாகிர், உலகில் அமைதியைப் பரப்புவதுதான் தனது கடமையாக கொண்டிருப்பதாகவும் இனபேதம் பார்ப்பது இஸ்லாத்தில் முற்றிலும் மறுக்கப்பட்ட ஒரு விடயம் என கூறினார்.

இந்நாட்டு இந்தியர்கள் மலேசிய பிரதமரைக் காட்டிலும் இந்திய பிரதமருக்குதான் ஆதரவாக இருப்பதாகவும் அதோடு சீனர்கள் மலேசிய நாட்டை விட்டு முதலில் வெளியேற வேண்டும் போன்ற தம்முடைய கூற்றுகள் மலேசியாவில் வாழும் பிற இன மக்கள் மனதை மிகவும் புண்படுத்தி உள்ளதால், தான் அனைவரிடமும் மன்னிப்பு கேட்டு கொள்வதோடு தன்னுடைய முழு உரையையும் you tube காணொளியில் கேட்குமாறும் ஜாகிர் கூறினார்.

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.