மரணத் தண்டணைக்கு மாற்றாக சிறை தண்டனை: பரிசீலனை

0
12

சண்டக்கான், ஜூலை 13- இன்று சண்டக்கானில்  நடைப்பெற்ற செய்தியாளர் கூட்டத்தில் பேசிய சட்டத்துறை அமைச்சர் லியூ வூய் கியோங், மரணத் தண்டனைக்கு மாற்றாக  10 முதல் 30 ஆண்டு வரையிலான சிறை தண்டனை வழங்க தம் குழுவுடன் ஆலோசித்து வருவதாக கூறினார்.

இதன் தொடர்பாக சிறப்பு குழு ஒன்று அமைத்து ஆய்வுசெய்யப்படும் என மேலும் சொன்னார். அரசாங்கம் மரணத் தண்டனையை முற்றாக எடுத்துவிடலாம் என பரிந்துரைத்தது. ஆனால்,  பொது மக்களிடமிருந்து  குறைந்த அளவில் மட்டுமே வரவேற்ப்பு  கிடைத்ததால் மரணத் தண்டனை குறித்தான பேச்சு வார்த்தை நிறுத்தப்பட்டிருந்தது.

அரசாங்கம் மரணத் தண்டனையை நிலைநிறுத்தும். இருந்தபோதும்  குற்றவாளிக்கு மரணத் தண்டணை அல்லது சிறை தண்டனையை விதிக்க வேண்டுமா என்பதை நீதிபதிகளின் முடிவுக்கே விட்டு விடலாமா என்பதை ஆய்வு செயலறிக்கை மற்றும் அக்டோபர் மாத நாடாளுமன்ற விவாதக் கூட்டத்திற்கு பின் உறுதிப்படுத்தப்படும் என்றார் லியூ.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here