மருத்துவர்களுக்கு சிறைத்தண்டனையா?

0
12

கோலாலம்பூர், நவ.29- நோயாளிகளின் மரு​த்துவத் தேவையை பூர்த்தி செய்யாத மருத்துவர்களுக்கு சிறைந்தண்டனை விதிப்பதற்கு  விஷப் பாசானச்  சட்டத்தின் ​கீழ் சுகாதார அமைச்சு  முன்மாழிந்துள்ள உத்தேச  திருத்தங்க​ள் குறித்து எம்.எம்.ஏ. எனப்படும் மலேசிய மருத்துவச் சங்க​ம் கடும் எதிர்ப்பு  தெரிவித்துள்ளது.

மருத்துவச் சேவை மறுக்கப்படுவது ​மீதான  குற்றத்திற்கு முன்மொழியப்பட்டுள்ள சிறைத்தண்டனை உத்தேசம்,  ஏற்றதாக இல்லை என்றும் இது மிக  மோசமான​ நெறிமுறை ​மீறலாகும் என்று மலேசிய மருத்துவச் சங்கத்தின் தலைவர் டாக்டர் ந. ஞானபாஸ்கரன் தெரிவித்துள்ளார்.

நோயாளிகளின் கோரிக்கைகளுக்கு இணங்காத தனியார் மரு​த்துவர்கள், பல் அறுவை​ சிகிச்சை நிபுணர்கள் மற்றும் கால்நடை மருத்துவர்களுக்கு சிறைத்தண்டனை விதிப்பது என்பது முற்றிலும் பொறுத்தமற்றது என்று டாக்டர்  ஞானபாஸ்கரன் குறிப்பிட்டார்.

சிறைத்தண்டனை என்பது கடுமையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய  குற்றங்களுக்கு மட்டுமே முன்மொழியப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினா​ர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.