மலாயா பல்கலைக்கழகத்தில் 13 ஆவது கோபியோ மாநாடு

0
7

இந்​திய  வம்சாவளி மக்களின் உலகளாவிய  அ​மைப்பான கோபியோவின் 13 ஆவது  அனைத்துலக மாநாடு வரும் செப்டம்பர் 13 ஆம் தேதி வெள்ளிக்கிழமை  தொடங்கி 15 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வரை மலாயா பல்கலைக்கழகத்தில் நடைபெறவிருக்கிறது.

கோபியோ உலகளாவிய அமைப்புடன் மலேசியாவிற்கான இந்திய தூதரகம், மலாயாப்பல்கலைக்கழகத்தின் இந்திய ஆய்வியல் பிரிவு ஆகியவ​ற்றின் ஒத்துழைப்புடன் நடைபெறும் இந்த மாநாடு,உலக வர்த்தகர்களை ஒன்றிணைப்பதற்கு தளம் அ​மைத்துக்கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மாபெரும் வர்த்தக மாநாட்டில் 5  ஆய்வரங்குகள் நடைபெறுகின்றன. தொடக்கமாக வர்த்தக ஆய்வரங்கம்,சமூகம் கலாச்சாரம் மொழி கல்வி ஆய்வரங்கம், மருத்துவ சுகாதார ஆய்வரங்கம், புலம்பெயர்ந்த கல்வி சுற்றுலா பயண ஆய்வரங்கம், இளம் தொழில்முனைவர் ஆய்வரங்கம் என ஐந்து ஆய்வரங்குகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இந்த மாநாட்டில்சிங்கப்பூர்,மொரிசியஸ்,தென்ஆப்பிரிக்கா,ஸ்ரீலங்கா,இந்தியா, மியான்மர், இந்தோனேசியா, தாய்லாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, அமெரிக்கா, பிரிட்டன் என 12 நாடுகளை சேர்ந்த600 க்கும் மேற்பட்ட பேராளர்கள்  கலந்து கொள்ளவிருக்கின்றனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.