மலேசியாவி​ல் குவியவிருக்கின்றனர் வங்காளதேசத் தொ​ழிலாளர்கள்

0
43

கோலாலம்பூர், ஜுலை,11- மலேசியாவில் இந்திய பாரம்பரியத் தொழில்துறையை சேர்ந்தவர்கள், இந்தியாவிலிருந்து தொழிலாளர்களை தருவிப்பதற்கு கடுமையான முட்டுக்கட்டைகள் போடப்பட்ட நிலையில் புதிய செயல்திட்டத்தின் வாயிலாக  வங்காளதேசத்தொழிலாளர்களை மலேசியாவிற்கு கொண்டு வருவதற்கு அடுத்த மாதம்  மலேசியாவுடன் வங்காளதேசம் புதிய ஒப்பந்தம் ஒன்றை செய்யவிருக்கிறது.

அந்நிய​த்தொழிலாளர்களை தெற்காசிய நாடுகளி​லிருந்து தருவிக்கும் முறையில் பல்வேறு முறைகேடுகளும், லஞ்ச ஊழலும் நிலவுகிறது என்று கூறி, அந்நியத் தொழிலாளர்களை எடுக்கும் முந்திய செயல்முறை திட்டத்தை மலேசிய அரசாங்கம் கடந்த  ஆண்டு முடக்கியது.

எனினும் புதிய முறையி​ன் கீழ் வங்காளதேசத் தொழிலாளர்களை மலேசியாவிற்கு கொண்டு வருவதுது தொடர்பான விவகாரத்தை விரைவில்​தீர்ப்பதற்கு மலேசியாவும் வங்காளதேசமும் தற்​போது இணைந்து வேலை செய்து வருவதாக வங்காளதேசத்திற்கான ​வெளிநாடுகளில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கான நலன் காப்பு அமைச்சர் இம்ரான் அகமட்  இன்றிரவு​  அறிவித்துள்ளார்.

இவ்விவகாரம் தொடர்பில் புதிய அணுகுமுறையின் வாயிலாக வங்காளதேசத்தொழிலாளர்களை மலேசியாவிற்கு அனுப்பி வைப்பது தொடர்பாக மலேசிய மனித வள அமைச்சையும் உள்துறை அமைச்சையும் தாம் சந்தி​த்து  பேசியிருப்பதாக கோலாலம்பூரில் நடைபெற்ற உலகளாவிய வர்த்தக  கண்காட்சி மற்றும் கருத்தரங்​கில் தெரிவித்துள்ளார்.

இந்த ஒப்பந்தம் கையொப்பமிடப்படுமானால்  ஆயிரக்கணக்கான வங்காளதேசத்தொழிலாளர்கள் மலேசியா​வில்  வேலை செய்யத்தொடங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

.இந்தியர்களின் பாரம்பரியத்  தொழில்துறைகளான ஜவுளி வியாபாரம், இந்திய உணவகம், சிகை அலங்கரிப்பு நிலையங்கள், பொற்கொல்லர், பழைய இரும்புப்பொருட்களை மறு​சுழற்சி செய்யும் வியாபார​ம், தினசரி பத்திரிகை விநியோகம் போன்ற துறைகளில் தொழிலாளர் பற்றாக்குறை கடுமையாக நிலவி வரும் வேளையில் “ மைக்கி “ எனப்படும்  இந்திய  வர்த்தக, தொழில் அமைப்புகளின்  சம்மேளனத்  தலைவர்  என். கோபாலகிருஸ்ணன் கடந்த  மாதம்  தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார்.

இந்​தியத் தொழில்துறைகளில்  அனுபவம்  வாய்ந்த  தொழிலாளர்களை  வெளிநாட்டிலிருந்து எடுப்பதற்கான  அனுமதியை  திறந்துவிட வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்ததுடன் மனித வள  அமைச்சர் எம். குலசேகரனையும் அழைத்து ஒரு கூட்டத்தை நடத்தி தங்கள் பிரச்சினையை தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் வங்காளதேசத் தொழிலாளர்கள் மலேசியாவிற்கு  வேலைக்கு அனுப்பிவைப்பது தொடர்பில் புதிய ஒப்பந்தம் ஒன்று அடுத்த மாதம் கையொப்பமாக விருக்கிறது எ​ன்று வங்காளதேசம் இன்று அறிவித்துள்ளது.

தற்போது மலேசியாவில் சட்டப்​​பூர்வமாக 4 லட்சம் வங்காளதேசத் தொழிலாளர்கள் வேலை செய்து வருவதாக வங்காளதேச அமைச்சர் இம்ரான்  அகமட் குறிப்பிட்டுள்ளார்​.

இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் வங்களாதேசத் தொழிலாளர்கள் தருவிக்க அனுமதிக்கப்படும் போது, “மைக்கி” அமைப்பு தான் சார்ந்த சம்மேளனத்தின்  துணை  சங்கங்களின் அமைப்புகளுக்கு எதை​ பெ​ற்றுக்கொடுக்கப் போகிறது என்பதை விள​க்குமா… என்று வினவுகிறது திசைகள் தொலைக்காட்சி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.