மாட்டு சூப் சாப்பிட்டதால் அடி உதை

0
15
முகமது பைசான்

நாகப்பட்டினம் மாவட்டம், பொரவச்சேரி கிராமத்தைச் சேர்ந்த முகம்மது பைசான், கடந்த 9-ம் தேதி மாட்டு இறைச்சி சூப் சாப்பிட்டுள்ளார். சூப் சாப்பிட்ட புகைப்படத்தை முகம்மது பைசான் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டார்.

 இதனைக் கண்ட அப்பகுதியைச் சேர்ந்த 15-க்கும் மேற்பட்டோர், முஹம்மது பைசானை கத்தி, இரும்பு கம்பி போன்ற ஆயுதங்களால் கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் படுகாயமடைந்த முஹம்மது பைசானை அப்பகுதி மக்கள் மீட்டு நாகை அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பைசான் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும், இல்லையென்றால், போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

-நன்றி நியூஸ்18-

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here