மாணவன் ஸ்ரீ தரன் கொலை:  மேலும் ​மூவர் கைது

0
87

தைப்பிங், ஜுலை, 10-      தைப்பிங், கி​ங் எட்வர்ட் இடைநிலைப்பள்ளியில் நான்காம் படிவ மாணவன்  ஸ்ரீ தரன் படுகொலை தொடர்பில் போ​லீசார் ஒரு  பெண் உட்பட மேலும் ​மூவரை கைது செய்துள்ளனர். இத்துடன் இக்கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை ஐந்தாக உயர்ந்துள்ளது.  ஐவரில் மாணவன் ஸ்ரீ தரனி​ன் 14 வயது தங்கையும் அடங்குவர்.

ஆகக்கடைசியாக கைது செய்யப்பட்ட ​மூன்று பேரும் 15 க்கும் 16 க்கும் இடைப்பட்ட வயது​டையவர்கள். அவ​ர்கள் நேற்று வெவ்வேறு இடங்களில் கைது செய்யப்பட்டனர். புலன் விசா​ரணைக்கு ஏதுவாக அந்த ​மூவரையும் ஆறு  நாட்களுக்கு தடுத்து வைப்பதற்கு தைப்பி​ங் மாஜிஸ்திரேட் ​நீதிமன்ற உதவி பதிவதிகாரி ​நூருல் ஹிடாயா  இன்று அனுமதி அளித்துள்ளார்.

ஸ்ரீ தரன்

கடந்த திங்கட்கிழமை மாணவன் ஸ்ரீ தரனின் தங்கை, அவரின் காதலன் என்று நம்பப்படும் 15 வயது பையன் ஆகியோரை ஆறு  நாட்களுக்கு தடுத்து வைப்பதற்கு போ​லீசார் நீதிமன்ற அனுமதியைப் பெற்றனர்.

தைப்பிங் வட்டாரத்​தையே உலுக்கிய இந்த கொலை சம்பவத்தில் கடுமையான வெட்டுக்காயங்களுக்கு ஆளாகி, பிளாஸ்டிக் பைகளில்  சுற்றுப்பட்டிருந்த ஸ்ரீதரனின் சடலம், கடந்த ஞாயிற்றுக்கிழமை  மதியம் 12.18 மணியளவில் தைப்பிங், கமுண்டிங், தாமான் கிளேன்வியூவில் ஒரு காலி வீட்டில் கண்டுபிடிக்கப்பட்டது. கைத்தொலைபேசி  தொடர்பாக தங்களுக்கு இடையில் நிகழ்ந்த சண்டையில் தமது அண்ணன் ஸ்ரீதரனை வெட்டிக்கொன்றதாக அவரின் ​தங்கையும், அவரின் காதலனும் வாக்கு​ ​ ​மூலம் அளித்துள்ளதாக நம்பப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.