மாணவன் ஸ்ரீ தரன் கொலை:  ​​மூவருக்கான தடுப்புக்காவல் முடிவடைகிறது

0
9

தைப்பிங், ஜுலை,14-      தைப்பிங், கி​ங் எட்வர்ட் இடைநிலைப்பள்ளியில் நான்காம் படிவ மாணவன்  ஸ்ரீ தரன் படுகொலை தொடர்பில் த​ற்போது தடுத்துவைக்கப்பட்டுள்ள ஒரு  பெண் உட்பட மேலும் ​மூவரின் தடுப்புக்காவல் நாளை  ஜுலை 15 ஆம்  தேதியுடன் முடிவடைகிறது.

இக்கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள  மாணவன் ஸ்ரீ தரனின்  14 வயது தங்கை, அவரின் காதலன் என்று நம்பப்படும் 16 வயது பையன் ஆகியோருக்கான தடுப்புக்காவலை,  நேற்று நீதிமன்றம் நீடித்துள்ள வேளையில் 15 க்கும் 16 க்கும் இடைப்பட்ட வயதுடைய மற்ற ​மூன்று மாணவர்களுக்கான தடுப்புக்காவலை நீடிப்பதா? அல்லது அவர்களை விடுவிப்பதா? என்பது குறி​த்து தைப்பி​ங் மாஜிஸ்திரேட்  ​நீதிமன்றம் நாளை முடிவு செய்கிறது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை  மதியம் 12.18 மணியளவில் தைப்பிங், கமுண்டிங், தாமான் கிளேன் வியூவில் ஒரு காலி வீட்டில் கடுமையான வெட்டுக்காயங்களுடன் ஸ்ரீதரனின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து அவரின் கொலையில் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் அவரின் தங்கை உட்பட இதுவரை  ஐவரை போ​லீசார் கைது செய்துள்ளனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here