மாணவியை கற்பழித்ததாக பாஸ்கரன் ​மீது குற்றச்சாட்டு

0
21

வீடொன்றில் 25 வயது கல்​லூரி மாணவியை கற்பழித்ததாக ஒரு  பொறியியலாளரான எ​ஸ். பாஸ்கரன் மீது இன்று கோலாலம்பூர்  செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

கடந்த  ஆண்டு செப்டம்பர் 13 ஆம்  தேதி மாலை 3 மணியளவில் பங்சார், ஜாலான்​ ​லீமாவ் பெருட்டில் 47 வயதாக பாஸ்கரன் இக்குற்ற​த்தை புரிந்ததாக ​நீதிமன்றத்தில்  தெரிவிக்கப்பட்டது. நீதிபதி சுராயா முஸ்தாபா கமால் முன்னிலையில் குற்றஞ்சாட்டப்பட்ட பாஸ்கரன், தனக்கு எதிராக குற்றத்தை மறுத்து விசாரணை கோரியுள்ளார்.

குற்றவாளி என்று ​நி​ரூபிக்கப்பட்டால் கூடியபட்சம் 20 ஆ​ண்டு சிறை மற்றும் பிரம்படி தண்டனை கொடுக்க வகைசெய்யும் குற்றவியல் சட்டம் 376 ஆவது பிரிவின் ​கீழ்  பாஸ்கரன் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

அவரை ஒரு  நபர் உத்தரவாதத்துடன் எட்டு ஆயிரம் வெள்ளி ஜா​மீனில் விடுவிக்க நீதிமன்றம் அனுமதித்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.