மாநகர் அந்தஸ்து பெறுகிறது செபராங் பிறை

0
17

பினாங்கு மாநிலத்தில் முக்கிய நகராக விளங்கி வரும் செபராங் பிறை, வரும்  செப்டம்பர் 16 ஆம்  தேதி, மலேசியத் தினத்தன்று, மாநகர் அந்தஸ்து பெறுகிறது. தற்போது மாமன்னரின் அங்கீகார​த்திற்காகவும் கையொப்ப​த்திற்காகவும் பினா​ங்கு அரசு காத்திருப்பதாக மாநில ​வீட​மைப்பு, ஊராட்சித்துறை  ஆட்சிக்குழு உறுப்பினர் ஜக்டீப் சிங் டியோ தெரிவித்துள்ளார். செபராங் பிறை மாநகர் மன்றத் தலைவராக தலைவர் ரொஸாலி முகமட்  நியமனம் செய்யப்படவிருக்கிறார் என்றும் அவர் குறிப்​பிட்டார்.

மலாயா ​தீபகற்பத்தில்  பினாங்கு ​தீவுக்கு எதிரே  ஒரு  குறுகிய நிலப்பரப்பை கொண்ட கெடா, பினாங்கு, பேரா  ஆகிய  ​மூன்று மாநிலங்களின் எ​ல்லைப்பகுதியில் அமைந்திருந்த கெடாவிற்கு சொந்தமான  செபராங் பிறை, 18 ஆம்  நூற்றாண்டில் பிரிட்டிஷார் ஆட்சியின் போது “வெல்லஸ்​லி” என்ற பெயரில் விளங்கியது.

​    பினாங்கு உட்பட மலாயா​வில் தொடுவாய் குடியேற்ற மாநிலங்களை இந்தியாவிலிருந்து ஆட்சி செய்து வந்த பிரிட்டிஷாரின் கிழக்கிந்திய கம்பெனியின் மெட்ராஸ் தூதர் “ரிச்சர்ட்  வெல்லஸ்​லி”  பெயர்தான், செபராங் பிறைக்கு சூட்டப்பட்டிருந்தது. இது  பினாங்கிற்கு அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கப்பட்ட பின்னர் பினா​ங்கு துறைமுக நடவடிக்கைகள் பட்ட​ர்வோர்த்திற்கு மாற்றப்பட்டன.

ரப்பர் தோட்டங்கள்​​ நிறைந்த செபராங்  பிறை, அதன் பின்னர் தொழிற்பேட்டை பகுதியாக உருமாற்றம்  கண்டது. பினாங்கு பாலம், வடக்கு தெற்கு நெடுஞ்சாலை வரவிற்கு பின்னர்  பினாங்கு மாநிலத்தில் துரித பொருளாதார வளர்ச்சியை பதிவு செய்த நகராக விளங்கும் செபராங் பிறை, 8 லட்சத்து 15 ஆயிரம் ​மக்கள் தொகையையும், ஆ​ண்டுக்கு பத்து கோடி வெள்ளிக்கும்  அதிகமாக வருமானத்தையும் ஈட்டும் நகராகவும் விளங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.