மாற்றத்தை நோக்கி பயணிக்கிறோம்; பேனர், போஸ்டர்கள் வைக்க வேண்டாம்: கட்சியினருக்கு கமல்ஹாசன் அறிவுறுத்தல்

0
134

பேனர்கள், போஸ்டர்கள் வைப்பதை தவிர்க்குமாறு மக்கள் நீதி மய்யம் கட்சியினருக்கு அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மக்கள் நீதி மய்யம் கட்சி சார் பில் ‘இது நம்மவர் படை’ என்ற தலைப்பில் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் இசையமைப்பாளர் தாஜ்நூர் இசையமைத்து, கவிஞர் சினே கன் எழுதிய பாடல்களை கமல்ஹாசன் வெளியிட்டார். பின்னர் அவர் பேசியதாவது:

பாடல்கள் அனைத்தும் மக்க ளின் உணர்வாக வெளிப்பட்டுள் ளது பாராட்டுக்குரியது. இந்த நிகழ்ச்சிக்கு வரும் வழியில் பேனர்கள், போஸ்டர்கள் இருப்பதைக் கண்டேன். மாற்றத்தை நோக்கி நாம் பயணித்துக் கொண்டிருக்கிறோம். எனவே, பழையன கழிதல் வேண்டும். இனிமேல் நிகழ்ச்சிகளுக்கு பேனர்கள், போஸ்டர்களை வைக்க வேண்டாம். நிகழ்ச்சியின்போது மாலைகள், சால்வைகள் அணிவிப்பதையும் தவிர்க்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன். ஒரு நபர் மட்டும் தேரை இழுக்க முடியாது. நாம் அனைவரும் சேர்ந்துதான் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.

கட்சியை பதிவு செய்யாமல் எந்த நன்கொடையும் பெற வேண் டாம் என தீர்மானமாக இருந்தோம். தற்போது தேர்தல் ஆணையத்தில் கட்சி பதிவு செய்யப்பட்டுவிட்டது. இந்நிலையில், தனியார் நிறுவன ஊழியர்கள் 2 பேர் முன்வந்து முதல் நன்கொடையாக ரூ.1 லட்சத்தை இன்று (நேற்று) வழங்கியுள்ளனர்.

நாங்கள் மற்ற கட்சிகள் போல வாங்கும் பணத்தை பதுக்கிவைக்க மாட்டோம். மக்களிடம் பெறும் பணத்தை வெளிப்படை யாக தெரிவிப்போம். பணத்தை பெற்றுக்கொண்டதற்காக கடன்பட்டதாக நினைக்கவில்லை. பல மடங்கு கடமை செய்ய காத்திருக்கிறோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.