முகேன் ராவின் காதலி யார்?

0
7994

பாடகராக கலைத்துறைக்கு அறிமுகமாகி இன்று முன்னணி இளம் கலைஞர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் முகேன் ராவ். பாடுவதைத் தொடர்ந்து ஆஸ்ட்ரோ 360 பாகை நிகழ்ச்சியின் தொகுப்பாளராக கலைப் பயணத்தை தொடர்ந்த முகேன் ராவ், தனது அடுத்தக் கட்ட பரிமாணமாக நடிப்பிலும் மிளிர்ந்து கொண்டிருக்கிறார்.

இசைக்காணொளி, குறும்படங்கள், தொடர் நாடகங்களில் நடித்து வரும் இவரின் அண்மைய படைப்புகளில் மிகவும் பிரபலமாக பேசப்படுவது ‘போகிறேன்’ எனும் இசைக்காணொளி. இவரே பாடி நடித்திருக்கும் இந்த காணொளியை இதுவரை 13 லட்சம் பேர் பார்த்திருக்கின்றனர். 30 ஆயிரத்திற்கும் அதிகமானோர் ‘லைக்’ செய்திருக்கின்றனர்.

முகேன் ராவ் நடித்திருக்கும் பல இசைக்காணொளிகள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறுவதை தொடர்ந்து, இசைக் காணொளிகளில் நடிப்பதற்கான வாய்ப்புகள் இவரை நிறையவே தேடி வருகிறதாம். இவரின் கைவசம் இருக்கும் வாய்ப்புகளின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறதாம்.

இதற்கு மத்தியில் இவருக்கான ரசிகர்கள் எண்ணிக்கையும் பெருகி வருகிறதாம். ரசிகர்கள் பட்டியலில் ரசிகைகள் எண்ணிக்கைதான் அதிகமாம். இருப்பினும், தமது ரசிகைகளிடம் இவர் கண்ணியமாக நடந்து கொண்டு நல்ல பெயர் எடுத்து வைத்திருக்கிறார்.

இவரைப் பற்றிய செய்திகளை தெரிந்து கொள்ள ஆர்வம் கொண்டவர்கள் மத்தியில், முகேன் ராவின் காதலி யார் என்று தெரிந்து கொள்வதிலேயே ஆர்வம் காட்டுகிறார்களாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.