முதலாளிகளுக்கும் பணியாளருக்கும் புதிய நேரடி வேலை வாய்ப்பு ஒப்பந்தம்

0
287

 

வெளிநாட்டிலிருந்து வீட்டு வேலைக்கு வரும் பணியாளர்களுக்கான புதிய நேரடி வேலை வாய்ப்பு ஒப்பந்தம் முதலாளிகளுக்கும் பணியாளருக்கும் பாதுகாப்பானதாக இருக்கும் என குடிநுழைவுத்துறை தலைமை இயக்குநர் முஸ்தபார் அலி தெரிவித்தார்.

இந்த உடன்படிக்கை முதலாளிகளுக்கும் உள்நாட்டு உதவியாளர்களுக்கும் இடையில் நேரடியாக ஒப்பந்தம் செய்யப்படுவதால் முகவர்களின் துணையின்றி இரண்டு தரப்பினரும் குடிநுழைவுத்துறை  விதிமுறைகளை பின்பற்ற முடியும். ஜனவரி 1-ஆம் தேதி தொடக்கம் இதுவரை இணையம் வாயிலாக 3,141 விண்ணப்பங்கள் பெறபட்டுள்ளன என முஸ்தபார் அலி தெரிவித்தார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here