முதல்வர் பழனிசாமி மீதான புகாரை சிபிஐ விசாரிக்க உத்தரவு

0
14

சென்னை: முதல்வர் பழனிசாமி மீதான டெண்டர்முறைகேடு புகாரை சிபிஐக்கு மாற்றி சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

நெடுஞ்சாலை துறையில், சாலைகள் அமைக்க மற்றும் பராமரிக்க, ‘டெண்டர்’ வழங்கியதில், முறைகேடு நடந்துள்ளதாக, முதல்வர் பழனிசாமிக்கு எதிராக, லஞ்ச ஒழிப்பு துறையில், திமுக.,வின் ஆர்.எஸ்.பாரதி புகார் அளித்தார். பின், உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெகதீஷ் சந்திரா, இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டு உள்ளார். மேலும், வழக்கு ஆவணங்களை, ஒரு வாரத்தில் சிபிஐயிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் ஒப்படைக்க வேண்டும். ஆரம்ப கட்ட விசாரணையை 3 மாதத்தில் சிபிஐ முடிக்க வேண்டும். இதில் முகாந்திரம் இருந்தால் முதல்வர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டு உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here