முருகதாஸை தொடர்ந்து நடிகர் ஸ்ரீகாந்த்- நீளும் ஸ்ரீரெட்டியின் பட்டியல்!

0
160

தெலுங்கு பட உலகில் பாலியல் தொல்லை இருப்பதாக புகார் கூறி நிர்வாணப் போராட்டத்தில் ஈடுபட்ட நடிகை  ஸ்ரீரெட்டி தற்போது தனது ஃபேஸ்புக் பக்கத்தில் நடிகர் ஸ்ரீகாந்தின் பெயரை வெளியிட்டுள்ளார்.

பட வாய்ப்புக்காக நடிகைகளைப் படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் தெலுங்கு சினிமாவில் இருப்பதாக நடிகர்கள், தயாரிப்பாளர்கள் மீது புகார் கூறிய நடிகை ஸ்ரீரெட்டி, அதற்காக அரை நிர்வாண போராட்டம் நடத்தி பரபரப்பை ஏற்படுத்தினார். மேலும் தனது முகநூல் பக்கத்தில் ஸ்ரீலீக்ஸ் என்ற பெயரில் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர்களின் பெயர்களையும், புகைப் படங்களையும் செல்போன் குறுந்தகவல்களையும் ஆதாரத்தோடு வெளியிட்டார். இதனால் தெலுங்கு நடிகர் சங்கம் ஸ்ரீரெட்டியுடன் யாரும் நடிக்கக் கூடாது என்று தடை விதித்தது. இதையடுத்து மனித உரிமை ஆணையம் மற்றும் மகளிர் ஆணையத்தின் தலையீட்டால் ஸ்ரீரெட்டி படங்களில் நடிக்க விதித்திருந்த தடையை நீக்கி ஸ்ரீரெட்டி தொடர்ந்து படங்களில் நடிக்கலாம் என்று தெலுங்கு நடிகர் சங்கம் அறிவித்தது.

தெலுங்கு திரையுலகின் பெரிய தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்கள் மீது புகார் அளித்ததால் அவருக்கு வரும் பட வாய்ப்புகள் வெகுவாக குறைந்து விட்டது. இதையடுத்து தமிழ் சினிமாவிலும் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை இருப்பதாக சமீபத்தில் பேட்டி ஒன்றில் ஸ்ரீரெட்டி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் முருகதாஸ் தனக்கு சினிமா வாய்ப்பு தருவதாக கூறிவிட்டு பின்பு தரவில்லை என்று தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்த ஸ்ரீரெட்டி, இப்போது தமிழ் நடிகர் ஸ்ரீகாந்த் மீது பகிரங்கமாக பாலியல் புகார் தெரிவித்துள்ளார்.

தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில்  ஸ்ரீகாந்தின் படத்தை பகிர்ந்து “5 வருடங்களுக்கு முன்னால் ஹைதரபாத் பார்க் ஹோட்டலில் நடந்த செலிப்ரிட்டி கிரிக்கெட் பார்டி உங்களுக்கு ஞாபகம் இருக்கும் என்று நம்புகிறேன். நாம் இருவரும் கிளப்பில் ஒன்றாக நடனமாடிய போது நீங்கள் எனக்கு வாய்ப்பு வழங்குவதாக உறுதியளித்தீர்கள்..ஞாபகம் உள்ளதா?” என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் தமிழ் லீக்ஸ் என்ற தலைப்பில் தொடர்ந்து தமிழ் சினிமா பிரபலங்களின் பெயரை வெளியிட இருப்பதாகவும் மற்றொரு ஃபேஸ்ஃபுக் பதிவில் ஸ்ரீரெட்டி தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.