முழுக் கொள்ளளவை எட்டியது மேட்டூர் அணை: வெள்ள அபாய எச்சரிக்கை

0
157

மேட்டூர் அணையின் நீர்மட்டம், இன்று நண்பகல் 12 மணி அளவில் முழுக் கொள்ளளவை எட்டும் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில் தற்போது முழு அளவை எட்டியுள்ளது. இதனால் அணைக்கு வரும் 60 ஆயிரம் கனஅடி நீர் முழுமையாக வெளியேற்றப்படும் என்பதால் 12 டெல்டா மாவட்டங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கர்நாடகாவின் கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து வினாடிக்கு 81000 கனஅடி வீதம் உபரி நீர் திறக்கப்படுகிறது. இதனால் மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 68,489 கனஅடி வீதம் தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 119.7 அடியை எட்டியுள்ள நிலையில் நண்பகல் 12 மணி அளவில் அணை முழு கொள்ளளவை எட்டி விடும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டிருந்த நிலையில் தற்போது முழு அளவையும் எட்டியுள்ளது. தற்போது அணையின் நீர்இருப்பு 92.534 டிஎம்சி-யாக உள்ளது.

அணையிலிருந்து நேற்றிரவு முதல் வினாடிக்கு 30000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நீர்மின் நிலையம் வழியாக 20000 கனஅடி நீரும், 16 கண் மதகு வழியாக 9000 கன அடி நீரும், அணையின் கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் வழியாக ஆயிரம் கன அடி தண்ணீரும் வெளியேற்றப்படுகிறது. அணை நிரம்பினால், அணைக்கு வரும் 60000 கனஅடி நீரும் அப்படியே திறந்து விடப்படலாம் என்பதால், சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி உள்ளிட்ட 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.