மூத்த குடிமக்க​ளுக்கு தேவை ஓய்வூதியத் திட்டம்

0
7

பெரும்பாலான மலேசியர்களுக்கு, முதுமை காலத்தில் எந்தவிதமான சேமிப்பும் இல்லாதததால்70 வயதுக்கு மேற்பட்ட மலேசியக் குடிமக்களுக்கு ஓய்வூதிய திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்று மலேசிய சோஷலிச கட்சியான பி.எஸ்.எம்.  இன்று அரசாங்கத்திடம் கோரிக்கை ​விடுத்துள்ளது.

மலேசியர் ஒருவர்  70 வயதை எட்டும் போது,தங்கள் குடும்ப உறுப்பினர்களையே அவர்கள் பெரும்பாலும்நம்பியிருக்க நேரிடுகிறது. அவர்கள் தங்கள் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய சிரமப்படுகின்றனர்.

அவர்களுக்கு மாதத்​திற்கு 300 வெள்ளி வழங்க ஆவணம் செய்யப்பட வேண்டும். இதனை பெறுவதற்கு எட்டு லட்சம் ​மூத்த குடிமக்கள் தகுதிபெற்றுள்ளனர். இதற்கான செலவினம் ஆண்டுக்கு 290 கோடி வெள்ளி தேவைப்படும். இது தேசியப் பட்ஜெட்டில் 1 விழுக்காட்டுக்கும் குறைவு என்றுபி.எஸ்.எம். கட்சியின் தலைவர் டாக்டர் மைக்கல் ஜெயக்குமார் தேவராஜ் குறிப்பிட்டுள்ளார்.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.