மேகதாது விவகாரம் : எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்று சட்டப்பேரவை சிறப்பு கூட்டம் கூட்டியிருப்பது வரவேற்கத்தக்கது – மு.க. ஸ்டாலின்

0
54

சென்னை, மேகதாது குறுக்கே புதிய அணையை கட்ட கர்நாடக அரசு முயற்சி செய்து வருவது தொடர்பாக விவாதிப்பதற்காக தமிழக சட்டசபையை கூட்ட வேண்டும் என்று தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. இதை தொடர்ந்து சட்டசபை சிறப்பு கூட்டத்தை கூட்டுவதற்கான அனுமதி வேண்டி கவர்னர் பன்வாரிலால் புரோகித்துக்கு நேற்று சபாநாயகர் ப.தனபால் கடிதம் ஒன்று அனுப்பியிருந்தார்.

இந்த சட்டசபை சிறப்பு கூட்டத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தனித்தீர்மானம் ஒன்றை கொண்டுவர இருக்கிறார்.

இது குறித்து சென்னை விமான நிலையத்தில் பேட்டி அளித்த தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் மேகதாது விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்று சட்டப்பேரவை சிறப்பு கூட்டம் கூட்டியிருப்பது வரவேற்கத்தக்கது. சட்டமன்ற கூட்டத்தில் அரசு சார்பில் வைக்கப்படும் தீர்மானங்களை வைத்து தி.மு.க.வின் கருத்துக்கள் கூறப்படும் என்று குறிபிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here