ரஜினி அரசியலுக்கு வரட்டும் அப்புறம் என் கருத்தைச் சொல்கிறேன்: ஓபிஎஸ்

0
34

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் இன்று (வெள்ளிக்கிழமை பி.கே.மூக்கையாத்தேவரின் 40-ம் ஆண்டு குருபூஜையில் பங்கேற்ற துணை முதல்வர் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அடுத்து திமுக ஆட்சிதான் என்றும், 25 ஆண்டுகள் அக்கட்சி ஆட்சியில் இருக்கும் என மு.க.ஸ்டாலின் கூறி வருகிறாரே என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப, “ஸ்டாலின் கனவு உலகில் சஞ்சரித்து கொண்டிருக்கிறார். திமுக ஆட்சிக்கு வரப்போவதும் இல்லை; ஸ்டாலினின் கனவு எந்த காலத்திலும் நனவாகப்போவதும் இல்லை” எனத் தெரிவித்தார்.

ரஜினி பாஜகவில் இணையவிருப்பதாக வெளியான தகவல் குறித்த கேள்விக்கு, “ரஜினிகாந்த் சிறந்த நடிகர். அவருடைய நடிப்பை தமிழக மக்கள் மட்டுமல்லாமல், இந்திய மக்களும், ஏன் வெளிநாட்டு மக்களும் பாராட்டுகின்றனர். ஆனால், அவர் முழுமையாக அரசியலுக்கு வந்து அரசியல் ரீதியான இயக்கத்தை ஆரம்பித்த பின்னரே அவரின் அரசியல் பற்றி நான் கருத்து சொல்ல முடியும்” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.