ரஷ்யாவில் கட்டிடம் இடிந்ததில் பலி எண்ணிக்கை 33 ஆக உயர்வு

0
69
ரஷியாவின் உரால் மத்திய மாவட்டத்தில் அமைந்த மக்னிடோகோரஸ்க் நகரத்தில் 10 மாடிகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பின் முதல் தளத்தில் கடந்த திங்கட்கிழமை காலையில் கியாஸ் சிலிண்டர் வெடித்து சிதறியது.
இதில் அதன் ஒரு பகுதி முழுவதுமாக இடிந்து விழுந்து தரைமட்டமானது. பெண்கள், குழந்தைகள் உள்பட ஏராளமானவர்கள் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர்.
அதனை தொடர்ந்து போலீசார், ராணுவ வீரர்கள் மற்றும் மீட்பு குழுவினர் தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டனர். விபத்து நடந்த முதல் நாள் கட்டிட இடிபாடுகளில் இருந்து 4 உடல்கள் மீட்கப்பட்டன.
6 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இடிபாடுகளில் சிக்கிய 50-க்கும் மேற்பட்டோரை மீட்பதற்கான பணிகள் நடந்து வந்தன.
எனினும், ஒரு குழந்தை உள்பட 17 பேரை பிணமாகத்தான் மீட்க முடிந்தது. இதனால் பலி எண்ணிக்கை 21 ஆக உயர்ந்து இருந்தது.
இந்த நிலையில், தொடர்ந்து நடந்த மீட்பு பணியில் பலரது உடல்கள் மீட்கப்பட்டு உள்ளன.  இதனை தொடர்ந்து பலி எண்ணிக்கை 33 ஆக உயர்ந்துள்ளது.  தொடர்ந்து தேடுதல் மற்றும் மீட்பு பணி நடந்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here