ராஜராஜ சோழன் ஆட்சி இருண்ட ஆட்சி : பா.ரஞ்சித் கருத்தால் சர்ச்சை

0
25
 

ராஜராஜ சோழன் ஆட்சி தான் இருண்ட ஆட்சி என்று இயக்குனர் பா.ரஞ்சித் கூறியுள்ள கருத்து பல்வேறு எதிர்ப்புகளை உருவாக்கியதோடு மட்டுமல்லாது, பெரும் விவாதங்களுக்கும் வித்திட்டுள்ளது.

இயக்குனர் பா.ரஞ்சித் சமீபத்தில் தான் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் பேசியதாவது, மன்னர் ராஜராஜசோழன்தான் மக்களிடம் உள்ள நிலத்தை அபகரித்தவர். அவரது ஆட்சியிலிருந்துதான் ஜாதி பிழவு கட்டமைக்கப்பட்டது. தேவதாசி முறை அவர்கள் ஆட்சியில்தான் கொண்டுவரப்பட்டது. தற்போது ராஜராஜ சோழன் எங்களின் ஜாதிக்காரர் என்று 8 ஜாதிக்காரர்கள் சண்டையிட்டு கொள்கிறார்கள். ராஜராஜ சோழன் ஆட்சிதான் இருப்பதிலேயே இருண்ட ஆட்சி என்று நான் சொல்வேன்” என்றார்.

பா.ரஞ்சித்தின் இந்த கருத்திற்கு பாட்டாளி மக்கள் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. நெட்டிசன்களும், இந்த கருத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here