ராதாபுரம் தொகுதி தேர்தல் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் நாளை மறுவாக்கு எண்ணிக்கை

0
22

கடந்த 2016-ம் ஆண்டு தமிழக சட்டப் பேரவைக்கு நடந்த பொதுத்தேர்தலின் போது, நெல்லை மாவட்டம் ராதாபுரம் சட்டப்பேரவை தொகுதியில் அதிமுக வேட்பாளர் இன்பதுரை 69,590 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அப்பாவு 69,541 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார்.

போட்டியிட்ட இன்பதுரை, திமுக வேட்பாளர் அப்பாவுவை விட 49 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அதிமுக எம்எல்ஏ இன்பதுரையின் வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் அப்பாவு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

தொடரப்பட்ட வழக்கில் மறுவாக்கு எண்ணிக்கைக்கு உத்தரவிட்ட உயர் நீதிமன்ற உத்தரவுக்குத் தடைகேட்டு அவசர வழக்காக விசாரிக்க அதிமுக எம்எல்ஏ இன்பதுரை செய்த முறையீட்டை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளதை அடுத்து உயர் நீதிமன்றமும் நிராகரித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.