ராம் கர்ப்பால் : அரசாங்கத்தின் கட்டளைகளுக்கு அடிப்பணிகிறார் என்றால், சட்ட ஆலோசகரை நீக்க வேண்டும்

0
73

அட்டர்ணி ஜெனரல் அலுவலகம், அரசாங்கத்தின் கட்டளைகளுக்குச் செவிசாய்க்காமல், சுதந்திரமாகச் செயல்பட வேண்டும் எனும் கோட்பாடு புரியவில்லை என்றால், சட்ட ஆலோசகர் முகமட் ஹனாஃபியா ஜகாரியாவை அப்பதவியிலிருந்து  நீக்க வேண்டும் என்று புக்கிட் குளுகோர் எம்பி, ராம்கர்ப்பால் சிங் கூறியுள்ளார்.

அரசாங்கத்தின் உத்தரவின் பேரில், 1எம்டிபி, எஸ்.ஆர்.சி. இண்டர்நேசனல் சென்.பெர்.சம்பந்தப்பட்ட வழக்குகள் உட்பட, உயர் ஊழல் வழக்குகளைத் துரிதப்படுத்த வேண்டும் என்று அனைத்து துணைப் பொது வழக்கறிஞர்களுக்கும் ஹனாஃபியா அனுப்பிய மின்னஞ்சல் குறித்து ராம்கர்ப்பால் இவ்வாறு கருத்துரைத்தார்.

“இப்பிரச்சனையில் ஹனாஃபியாவின் நிலைப்பாடு மிகவும் தீவிரமானது.

“அட்டர்னி ஜெனரல் சேம்பர்ஸ் அரசாங்கத்தின் கட்டளைகளில் இருந்து விடுபட்டு, பாரபட்சமற்றதாக இருக்க வேண்டும் என்ற உண்மையை அவர் அறியவில்லை என்பதையே இது பிரதிபலிக்கிறது,”என்று ராம்கர்ப்பால் நேற்று ஓர் அறிக்கையில் கூறியிருந்தார்.

பொதுவாக, அட்டர்னி ஜெனரல்ஸ் சேம்பர்ஸ் அரசாங்கத்திற்கு ஆலோசனைகள் வழங்க வேண்டுமே ஒழிய, அதற்கு நேர்மாறாக அல்ல என்று ராம் கர்ப்பால் சொன்னார்.

mk

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.