வடக்கு கிரீஸ்சில் புயல்-6 வெளிநாட்டவர்கள் பலி

0
13

வடக்கு கிரீஸ்சில் பலமான புயல் வீசியதால் 6 வெளிநாட்டவர் புயலுக்குப் பலியானர். அந்த அறுவர்களில்  2 சிறுவர்களும் அடங்குவர்.  மேலும் 30க்கும் மேற்பட்டோருக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளது.

இறந்த  ரோமானியா நாட்டை சேர்ந்த 54 வயது பெண்மணியும் அவரின் 8 வயது சிறுவனும் காற்று அழுத்தத்தினால் நியா ப்லாகிய உணவகத்தின் கூரை விழுந்து பலியாகி உள்ளனர். மேலும் செக் நாட்டை சேர்ந்த இரண்டு தம்பதியனரும்  பலமான காற்று அடித்து இறந்துள்ளனர். அடுத்து மரம் விழுந்து ரஷ்யா நாட்டை சேர்ந்த தந்தையும் மகனும் பரிதாபமாக இறந்தனர் என்று நியா பொடதிடெய போலீஸ் அதிகாரி உறுதிப்படுத்தினார். பலமான இந்த புயல் காற்று 20 நிமிடம் வரை நீடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here