வட கொரியா உயர்மட்ட பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்ளும் வாய்ப்பை ஏற்றுக் கொண்டது

0
151

 

வட கொரியா அடுத்த வாரம் உயர்மட்ட பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்ளும் வாய்ப்பை ஏற்றுக் கொண்டது  என தென் கொரிய அதிகாரிகள் கூறியுள்ளனர்.

ஒற்றுமையை காண்பதற்கு ஒரு நல்ல வாய்ப்பாக அமையும் எனக் கருதி வட கொரியாவின் தலைவரான கிம் ஜொங் அங், வட கொரிய விளையாட்டு வீரர்கள், வரும் பிப்ரவரி மாதம் தென் கொரியாவில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிக்ளில் கலந்து கொள்ள அனுமதி தந்துள்ளார்.

இது குறித்து சந்திப்புக் கூட்டம் ஜனவரி 9 ம் தேதி பான்முஞ்சோமில், எல்லையில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இருந்தாலும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பு முடிந்த பின்னரே, வடக்கு- தெற்கு உறவுகளை மேம்படுத்துவது தொடர்பான விவாதங்கள் நடைபெறும் என நம்பப்படுகிறது.

இந்த முன்னேற்றத்தின் ஒரு சிறிய அறிகுறியாக, வட கொரியா பேச்சுவார்த்தை பற்றிய தொடர்புகளை செயல்படுத்த,  இருநாடுகளின் தொடர்பு எல்லையில் ஒரு தொலைபேசி ஹாட்லைனை ஏற்படுத்தியுள்ளனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here