வத்திராயிருப்பு அரசுப் பள்ளியில் தண்ணீர் தட்டுப்பாடு

0
28

 

 வத்திராயிருப்பு அருகே, அரசுப் பள்ளியில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் மாணவ, மாணவியர் அவதிப்படுகின்றனர். இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். வத்திராயிருப்பு அருகே, தம்பிபட்டியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு 400க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். 15க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். இங்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் மாணவ, மாணவியர் மற்றும் ஆசிரியர்கள் அவதிப்படுகின்றனர்.

பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள போர்வெல்லில் போதிய தண்ணீர் வருவதில்லை என கூறப்படுகிறது. இதனால் மாணவ, மாணவியரின் புழக்கத்திற்கு தண்ணீர் பற்றாக்குறையாக உள்ளது. மேலும், போர்வெல்லில் போதிய தண்ணீர் உள்ளதா என்பதை ஆய்வு செய்து, இல்லாவிடில் மாற்று இடத்தில் போர்வெல் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here