வலிமை படத்தில் நடிக்கிறாரா நயன்தாரா?

0
20

நேர்கொண்ட பார்வை படத்துக்கு பிறகு அஜித்குமார் ‘வலிமை’ படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை வினோத் இயக்குகிறார். போனிகபூர் தயாரிக்கிறார். ‘வலிமை’  அதிரடி ஆக்‌ஷன் படமாக தயாராகிறது. அஜித்குமார் போலீஸ் அதிகாரியாக நடிப்பதாக கூறப்படுகிறது. இதற்காக தோற்றத்தை இளமையாக மாற்றி இருக்கிறார். மோட்டார் சைக்கிள் பந்தயம் மற்றும் கார்பந்தய காட்சிகள் இப்படத்தில் இடம்பெறுகின்றன.

இந்த நிலையில் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நயன்தாராவும் அவரது காதலர் விக்னேஷ் சிவனும் போனிகபூரை சந்தித்து பேசி உள்ளனர்.
போனிகபூர் அவர்களுக்கு விருந்து அளித்துள்ளார். அப்போது போனிகபூரின் மகள் குஷி கபூரும் உடன் இருந்தார். இவர்களுடன் நயன்தாரா இருக்கும் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றன. சந்திப்பின்போது அஜித்தின் வலிமை படத்தில் அவருக்கு ஜோடியாக நடிப்பது குறித்து நயன்தாராவுடன் போனிகபூர் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கலாம் என்று தகவல் பரவி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.