வழக்கை தீவிரமாக கண்காணித்து வருகிறோம்- இந்தோனேசிய தூதரகப் போலீஸ்

0
15

பேராக், ஜுலை 13-  தொரொனோ சட்ட மன்ற உறுப்பினர் போல் யோங் தொடர்புடைய பாலியல் பலாத்காரம் வழக்கு தொடர்பாக இந்தோனேசிய தீவிரமாக கண்காணிக்கும் என்று இந்தோனேசிய தூதரகப் போலீஸ் அதிகாரி சைடீர் இன்று தெரிவித்தார். பேராக்கில், சட்ட மன்ற உறுப்பினர் வீட்டில் வீட்டு வேலை பார்த்த 23 வயதுள்ள பெண்மணியைக் பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக பாதிக்கப்பட்ட அப்பெண்ணின் புகாரை தொடர்ந்து அந்தப் பெண் பேராக்கில் உள்ள பாதுகாப்பு மையத்தில் அமர்த்தப்பட்டுள்ளார். இந்தச் சம்பவத்திற்கு பிறகு உடலளவில் அவருக்கு எந்த பாதிப்பும் இல்லை. ஆனால் மனதளவில் பாதிப்பு இன்னும் உள்ளது என தூதரகப் போலீஸ் கூறியது.

பேராக்  மாநிலப் போலீஸ் தலைவர் ரசாருடின் பேசுகையில், சம்பவம் நடந்த வீட்டில் இரசாயண சோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறினார்.

இதன் தொடர்பாக போல் யோங்கை விசாரிக்கையில், தான் எந்தவொரு பாலியல் வன்முறையிலும் ஈடுபடவில்லை என்றார். தன் மீது கொடுக்கப்பட்டுள்ள புகாரை ஏற்றுக் கொள்ள மறுத்த போல் யோங்கிற்கு ஜாமீன் வழங்கப்பட்டு வழக்கு விசாரணையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here