வழிப்பறிக் கொள்ளை: பாதிக்கப்பட்டவர் புகார் செய்ய கோரிக்கை

0
13

கோலாலம்பூர், ஜூலை 13 -கடந்த வியாழக்கிழமை அன்று,  சோகோ பேரங்காடி  அருகில் நடந்த வழிப்பறிக் கொள்ளை தொடர்பாக பாதிக்கப்பட்ட நபரை புகார் செய்யும்படி போலீஸ் கேட்டுக் கொண்டது மதியம் 1 மணி அளவில், சோகோ பேரங்காடியின் முன் உள்ள சாலையை கடக்க முற்பட்ட பெண்மணியின் கழுத்தில் உள்ள தங்கச் சங்கிலி கொள்ளையடிக்கப்பட்டது. அந்தச் சம்பவத்தை பதிவு செய்த ஒருவர், டாங் வாங்கி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

53 வினாடி உள்ள அந்த காணொளி வலைத்தளங்களில் பரவி வரும் வேளையில் அதே போன்று காணொளி ஒன்றை எடுத்த நபரும் பாதிக்கப்பட்ட அந்த பெண்மணியும் இது தொடர்பாக எந்தவொரு புகாரும் இன்றுவரை அளிக்கவில்லை என டாங் வாங்கி போலீஸ் துணை கமிஸ்னர் ஃபாமி விஸ்வநாதன் தெரிவித்தார்.

மேலும் அவர், அந்தக் கொள்ளையன் பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் பதிவு எண், போலியானது என்றும் மேலும் விசாரணையைத் தீவிரப் படுத்த சம்பந்தப் பட்ட அந்த நபர்கள் உடனே அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்குமாறு அவர் கேட்டுக் கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here