விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் நாளை ஓய்கிறது:

0
38

நாங்குநேரி தொகுதியில் 23 வேட்பாளர்களும் விக்கிரவாண்டி தொகுதியில் 8 வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர். இந்நிலையில் தேர்தல் பிரச்சாரம் நாளை மாலை 6 மணியுடன் ஓய்கிறது.

இதையொட்டி, நாங்குநேரி தொகுதியில், மாவட்ட தேர்தல் அலுவலரும் ஆட்சியருமான ஷில்பா பிரபாகர் சதீஷ், தேர்தல் பொதுபார்வையாளர் விஜயா சுனிதா, செலவின பார்வையாளர் அஜய்குமார் சிங் உள்ளிட்டோர் வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகளை கண்காணித்து வருகிறார்கள்.

இத்தொகுதியில் மொத்தம் 299 வாக்குச்சாவடிகள் அமைக்கப் பட்டுள்ளன. இவை 30 மண்டலங் களாக பிரிக்கப்பட்டு, மண்டல அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ள னர். தேர்தல் பணியில் 1,400 அலுவலர்கள் ஈடுபடுகிறார்கள். இடைத்தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக 800 போலீஸாரும், 3 கம்பெனி துணை ராணுவப் படையினரும் வரவுள்ளனர். தமிழ்நாடு சிறப்பு காவல் படையின் 3 கம்பெனிகள் ஏற்கெனவே வந்துள்ளன. மேலும், 10 கம்பெனி போலீஸார் வரவுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.