விஜயகாந்த்தை பிரச்சாரத்திற்காக அழைத்து வருவதற்கு இதுதான் காரணமா?

0
50

சென்னை: 2 தினங்களுக்கு முன்பு பிரேமலதா பேட்டி ஒன்றில், கேப்டன் இன்னும் 2 நாளில் பிரச்சாரத்துக்கு வருவார் என்று சொல்லிவிட்டு போனார். நாளையுடன் பிரச்சாரம் முடிவடையும் நிலையில், இப்படி ஒரு கடைசி நேர பிரச்சாரம் ஏன்? என்றால் அதற்கு அநேகமாக இரண்டு காரணங்கள்தான் இருக்க முடியும்எப்படி இருக்கிறார்? முதல் காரணம், கடைசிவரை விஜயகாந்த் இல்லாமலேயே இந்த தேர்தல் நடந்து முடிந்துவிட்டால் வாக்கு வங்கி காணாமலேயே போய்விடும். அதுவும் இல்லாமல் “இப்போது விஜயகாந்த் எப்படி இருக்கிறார், அவரை வீட்டிலேயே வைத்து மறைத்து விடுகிறார்களே” என்ற பல சந்தேகங்கள் பொதுமக்களிடையே வந்து போகிறது. அதனால் இதுபோன்ற காரணங்களை தெளிவுபடுத்தவே விஜயகாந்த்தை பிரச்சாரத்துக்கு அழைத்து வருவதுபோல தெரிகிறது.

இரண்டாவது காரணம், தேமுதிக தேய்ந்துபோய், பலமிழந்து, கலையிழந்து, உற்சாகம் இழந்து, காணப்படுகிறது. விஜயகாந்த் என்ற ஒற்றை மனிதனுக்காக கூடிய கூட்டம் இன்று காணவில்லை. பிரேமலதா செய்து வரும் பிரச்சாரங்கள் எல்லாமே சொதப்பல்தான். ஒன்றும் சொல்லி கொள்வது மாதிரி இல்லை.

(ONE INDIA TAMIL)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here