விண்வெளி ஆராய்ச்சிக்கு இயந்திர மனிதனைப் பயன்படுத்த ரஷ்யா திட்டம்

0
94

விண்வெளி மையத்தில் சிக்கலான ஆய்வுகளுக்கு இயந்திர மனிதர்களைப் பயன்படுத்த ரஷ்யா திட்டமிட்டுள்ளது.

ஃபெடார் ((FEDAR)) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த இயந்திர மனிதர்களை அடுத்த ஆண்டு முதல் நடைமுறைக்கு கொண்டுவர முடிவு செய்துள்ளது. ஏற்கனவே தீ விபத்து நடக்கும் இடங்களில் மீட்புப் பணிகளுக்கு இயந்திர மனிதர்களை பயன்படுத்துவது குறித்த செயல்திட்டம் வகுக்கப்பட்டு அதனை ரஷ்ய அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது.

இந்நிலையில் ராணுவத்தில் வீரர்களின் உயிரிழப்புகளைத் தடுக்க நேரடிப் போரிலும் இயந்திர மனிதர்களை ஈடுபடுத்த பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இத்தகைய இயந்திர மனிதர்களுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி வழங்கப்பட்ட போது அவை இலக்குகளை குறிதவறாமல் சுட்டு அசத்தின. இதேபோல் தானியங்கி பீரங்கி வண்டிகளும் இலக்குகளை தாக்கி அழித்தன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here