வில்லன் வேடத்தில் அக்‌ஷய்குமார்?

0
24
கமல்ஹாசன் நடித்து 1996-ல் வெளியாகி வசூல் குவித்த இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் ‘இந்தியன்-2’ என்ற பெயரில் தயாராகிறது.
ஷங்கர் டைரக்டு செய்கிறார். இதில் கமல்ஹாசன் வயதான தோற்றத்திலும், இளமையாகவும் வருகிறார். வெளிநாட்டு மேக்கப் கலைஞர்களை வைத்து வயதான தோற்றத்தை உருவாக்கி உள்ளனர்.
கதாநாயகியாக காஜல் அகர்வால் வருகிறார். இன்னொரு கதாநாயகியாக நடிக்க தென்கொரிய நடிகை பே சூஸியிடம் பேசி வருகின்றனர். இந்தியன் படத்தின் முதல் பாகத்தின் இறுதி காட்சி வெளிநாட்டில் முடிவடையும். இரண்டாம் பாகம் தைவானில் தொடங்கி இந்தியாவுக்கு வருவதுபோல் திரைக்கதை அமைத்துள்ளனர். தைவான் காட்சிகளில் பே சூஸி நடிக்கிறார்.
இந்த படத்தில் வில்லன் வேடத்தில் நடிக்க இந்தி நடிகர் அக்‌ஷய்குமாரிடம் பேசி வருகிறார்கள். இவர் ரஜினிகாந்தின் 2.0 படத்தில் வில்லனாக வந்தார். இதனால் வட இந்தியாவிலும் படம் நல்ல வசூல் பார்த்தது. இந்தியன்-2 படத்தில் நடிப்பது குறித்து இன்னும் அவர் சம்மதம் தெரிவிக்கவில்லை. ஆனாலும் படக்குழுவினர் தொடர்ந்து வற்புறுத்தி வருகிறார்கள்.
இந்தியன்-2 படத்தின் வயதான கமல் தோற்றத்தையும், வர்ம குறியீட்டையும் இயக்குனர் ஷங்கர் வெளியிட்டுள்ளார். இது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
இந்த நிலையில் இந்தியன்-2 படப்பிடிப்பு சென்னையில் நேற்று தொடங்கியது. கமல்ஹாசன் வயதான தோற்றத்தில் மேக்கப் போட்டு நடித்தார். காஜல் அகர்வாலும் அவருடன் நடித்தார். 2, 3 மாதங்கள் தொடர்ச்சியாக இதன் படப்பிடிப்பில் கமல்ஹாசன் பங்கேற்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here