விஸ்வாசம் படத்தில் ரசிகர்கள் எதிர்ப்பார்த்தது இல்லை

0
277
அஜித்துடன் – சிவா 4-வது முறையாக இணையும் ‘விஸ்வாசம்’ படத்தின் படப்பிடிப்பு வருகிற மார்ச் 15-ந் தேதி தொடங்கும் என்று படக்குழு அறிவித்துள்ளது.
‘விவேகம்’ படத்தை தயாரித்த சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் இந்த படத்தையும் தயாரிக்கிறது. இதில் அஜித் ஜோடியாக யார் என்பது குறித்து குழப்பம் நீடித்த நிலையில், அஜித் ஜோடியாக நயன்தாரா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
அதன்பின் டி.இமான் ‘விஸ்வாசம்’ படத்திற்கு இசையமைக்க இருப்பதாக படக்குழுவினர் அறிவித்தனர். இவருடைய இசையில் அஜித் தன்னுடைய சொந்த குரலில் ஒரு பாடல் பாட உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. இதனால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்திருந்தனர்.
இந்நிலையில் தற்போது இந்த தகவல் உண்மை இல்லை, அஜித் பாடல் எதுவும் பாட மாட்டார் என செய்திகள் வெளியாகியுள்ளது. ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த விஷயம் இப்படத்தில் இல்லாததால் ரசிகர்கள் அதிர்ச்சியாகி உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.