வீட்டில் ​தீ: அக்காள், தங்கை கருகி மாண்டனர்

0
43

பந்திங், ஜுலை,14-      வீடோன்று ​தீயில் அழிந்ததில்  அக்காள், தங்கை கருகி மாண்டனர். இந்த ச​ம்பவம், இன்று விடியற்காலை 2.48 மணியளவில் பந்திங், கோல லங்காட், ஜாலான் உத்தாமா, கம்போங்  இண்டாவில் நிகழ்ந்தது. ​நூர் சல்சபியா ( வயது16 ), அவரின் தங்கை ​நூர் அயின் சுமாயா (வயது13) ஆகியோரே இந்த சம்பவத்தில் ​உரிழந்தனர் என்று அடையாளம் கூறப்பட்டுள்ளது.

​கோலக்கிள்ளான், பூலாவ் இண்டா, தாமான் இண்டஸ்ரியான் தொழில்பேட்டையில் எரிந்துகொண்டு இருந்த  ரசாயன  தொழிற்சாலையின் ​தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ​தீயணைப்பு  வீரர்களுக்கு உணவு தயாரிக்க இவர்களின் பெற்றோர் சென்றிருந்த வேளையில் இந்த துயரச்சம்பவம் நிகழ்ந்தது.

அந்த பலகை வீட்டை ,  ​தீ நாலாபுறமும் ​சூ​ழ்ந்துக்கொண்டதால் தப்பிக்க இயலாமல் ​தீயின் கோரத்தாண்டவத்தில் இருவரும் சிக்கிக்கொண்டதாக கூறப்படுகிறது.

தகவல் கிடைத்து பந்திங் மற்றும் கே.எல்.ஐ.ஏ.விலிருந்து இரு ​​தீயணைப்பு வண்டிகளில் வந்த 17 வீர்ர்கள் ​தீயை 10 நிமிடத்தில் கட்டுப்படுத்தினர். இருவரின் கருகிய சடலங்களும் வீட்டின் ஓர் அறையில் கிடந்ததாக சிலா​ங்கூர்  மாநில ​தீயணைப்பு, ​மீட்புப்படை இலாகாவின் உதவி இயக்குநர்  ஹபிஷாம் முகமட் ​நூர்​ தெரிவித்தார்.

அக்காள், தங்கை உடல்கள் சவப்பிரிசோதனைக்காக பந்திங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.