வெ.400 கோடி நிலங்களை தே.மு. அரசாங்கம் விற்றது

0
8

பக்காத்தான் அரசாங்கம் 2018 மே 8இல் ஆட்சிக்கு வந்த பின்னர் அரசாங்கத்துக்குச் சொந்தமான நிலங்களை விற்றதாகக் கூறப்படுவதை நிதி அமைச்சர் லிம் குவான் எங் மறுத்துள்ளார்.

முன்னாள் தேசிய முன்னணி  அரசாங்கம்தான் 2010 ஆண்டுக்கும் 2017 ஆண்டுக்கும் இடைப்படட் காலத்தில் 400 கோடி வெள்ளிக்கும் மேல் பெறுமதிபுள்ள நிலங்களை விற்றுள்ளதாக  லிம்  தெரிவித்தார்.

“அப்போது பெரும்பாலான அரசாங்க நிலங்களின்விற்பனை, நேரடிப் பேச்சுகளின் மூலமாகத்தான் விற்பனை செய்யப்பட்டுள்ளதே தவிர திறந்த டெண்டர் முறை வாயிலாக அல்ல என்றுஇன்று ஓர் அறிக்கையில் லிம்விளக்கினார்.

கோலாலம்பூர் கூட்டரசு நில ஆணையத்துக்குச் சொந்தமான 14 நிலங்களும் சிலாங்கூரில் இரண்டு நிலங்களும் தேசிய முன்னணி அரசாங்கம் விற்பனை செய்து இருப்பதாக லிம் சுட்டிக்காட்டினார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.