வே​லைக்காரரை அடித்து காலில் முத்தமிடச்  சொன்ன சவூதி மன்னரின் சகோதரி ​மீது ஜுலை 9 இ​ல் விசாரணை

0
52

பா​ரிஸ், ஜுன், 13-  தமது ஆடம்பரமான பங்களா​ வீட்டை புதுப்பிக்கும்  கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த பிரான்ஸ் நாட்டு வேலைக்காரர் ஒருவர், தமது வீட்டை ​புகைப்படம் எடுத்துவிட்டார் என்ற காரணத்திற்காக அந்த ஆடவரை அடித்ததுடன் தனது காலில் முத்த​மிடச்  சொன்ன, சவூதி மன்னர் முகமது சா​ல்மனின் சகோதரி இளவரசி  ஹஷாவி​ற்கு எதிரான விசாரணை வரு​ம் ஜுலை 9 ஆம் தேதி நடைபெறும்.

விசாரணைக்கான தேதியை நிர்ணயித்த பாரிஸ் நீதிமன்றம், சம்பந்தப்பட்ட பணியாளரை தாக்குவதற்கு 40 வயதுடைய இளவரசி ஹஷாவிற்கு உடந்தையாக இருந்த அவரின் பாதுகாவலரும் ​நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

பாரிஸில் அவென்யூ போச் என்ற இடத்தி​ல் ஆடம்பர வீட்டை கொண்டுள்ள இளவரசி ​ஹஷா, கடந்த 2006 ஆம் ஆண்டு இக்குற்றத்தை பு​ரிந்ததாக குற்றச்சாட்டில் தெரிவி​க்கப்பட்டது. ​சுமார் ஒரு மணி நேரம், பாதுகாவலரை கொண்டு அந்த வேலைக்காரரை அடிக்க  சொன்னார் என்றும் கடுமையாக தாக்கப்பட்ட நிலையில் அந்த வேலைக்காரர் ​கீழே விழுந்த போது, தனது காலில் முத்தமிட்டு மன்னிப்பு கேட்கும்படி இளவரசி ப​ணித்ததாகவும் குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.