ஸ்டாக்கோம் விமான நிலைய கட்டிடத்தில் ஏர் இந்தியா விமானம் மோதியது

0
97

ஸ்டாக்கோம், ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்கோம் நகரில் உள்ள  அர்லாண்டா விமான நிலையத்தில் 179 பயணிகளுடன்  நின்று கொண்டிருந்த ஏர் இந்தியா விமானம் விமான நிலையத்தின் கட்டிடத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

விமானத்தின் வால் பகுதி விமான நிலைய கட்டிடத்தில் உரசியதாக முதற்கட்ட தகவல்கள் கூறுகின்றன. இந்த விபத்து நடைபெற்றதும், விமானத்தில் இருந்த 179 பயணிகளும் உடனடியாக விமானத்தில் இருந்து இறக்கப்பட்டனர். பயணிகள் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை என்று விமான நிலைய போலீசார் தெரிவித்தனர்.

இந்த விபத்துக்கான காரணம் பற்றி உடனடியாக தகவல் எதுவும் வெளியாகவில்லை. உள்ளூர் நேரப்படி நேற்று மாலை 5.45 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்து இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here