ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தமிழக அரசு கொள்கை முடிவு எடுக்க நடவடிக்கை எடுக்காததால் வெளிநடப்பு – மு.க.ஸ்டாலின்

0
71
ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தமிழக அரசு கொள்கை முடிவு எடுக்க நடவடிக்கை எடுக்காததால் வெளிநடப்பு செய்வதாக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
ஸ்டெர்லைட் ஆலையை மூட அரசு கொள்கை முடிவு எடுக்காததற்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவையிலிருந்து  மு.க ஸ்டாலின் மற்றும் திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
தமிழக சட்டசபையில் வெளிநடப்புக்கு பின் எதிர்க்கட்சி தலைவர் மு.க ஸ்டாலின் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு கொள்கை முடிவு எடுக்க வேண்டும் . முற்பட்டோர் சமூகத்தில் பொருளாதார ரீதியாக பின்தங்கியோருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மத்திய அரசின் முடிவுக்கு திமுக கண்டனம் தெரிவிக்கிறது என கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here