ஸ்ரீதேவியின் மரணத்தில் மர்மம் நீடிக்கின்றது

0
57
முன்னாள் தடயவியல் நிபுணர் டாக்டர் உமாடாதன் கூறிய விஷயங்களை மேற்கொள் காட்டியிருக்கும் டிஜிபி, ஸ்ரீதேவியின் மரணம் கொலையாக இருக்கலாம் என்று தனது நண்பர் என்னிடம் கூறியிருந்தார் என்றும் கூறுகிறார். ஸ்ரீதேவியின் மரணம் குறித்து அறிந்துகொள்ள கேரள டிஜிபி தடயவியல் நிபுணர் டாக்டர் உமாடாதனை நாடியுள்ளார். அப்போது தடயவியல் நிபுணர் தன்னிடம் கூறியதை வெளி உலகுக்கு கூறியுள்ளார் டிஜிபி ரிஷிராஜ் சிங்.
டாக்டர் உமாடாதன் ஸ்ரீதேவியின் மரணம் குறித்து கூறியது என்னவென்றால், நடிகை ஸ்ரீதேவி அதிகமாகக் குடித்துவிட்டு குளியலறையில் மூழ்கியதாகத்தான் கூறப்படுகிறது. அப்படியே அவர் அதிகமாகக் குடித்திருந்தாலும் வெறும் ஒரு அடி உயரமே இருக்கும் தண்ணீரில் மூழ்கியிருக்க முடியாது. வேறு ஒருவர் அவரது தலையை தண்ணீரில் பிடித்து அழுத்தினால் தவிர, ஒரு அடி தண்ணீரில் நிச்சயம் அவர் மூழ்கி உயிரிழந்திருக்க முடியாது என்று தெரிவித்ததாக டிஜிபி கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.