ஸ்ரீ மாரன் மரத்தாண்டவர் ஆலயத்தின் நிலை கேள்விக்குறி

0
6

சுமார் 120 ஆண்டு கால  பழமை வாய்ந்த பகாங், மாரான், ஸ்ரீ மரத்தாண்டவர்  ஆலயத்தின் பதிவு, சங்கங்களின் பதிவு அலுவலகத்தினால் ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து அதன் எதிர்கால தலைவிதி இன்னும் இரண்டு, மூன்று தினங்களின் நிர்ணயிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆலயத்தின் கணக்கு வழக்குகள் மற்றும் நிர்வாக கோளாறுகளை காரணம் காட்டி, கடந்த  ஆகஸ்ட் 15 ஆம் ​தேதி, அந்த பழ​மை  வாய்ந்த ஆலயத்தின் பதிவு ரத்து செய்யப்படுவதாக சங்கங்களின் பதிவ​திகாரி சையிட் சுல்கிப்லி சையிட் முகமட் அறி​வித்துள்ளார்.

எனினும் ஆலயத்தின் பதிவுக்கு மறுபடியும் புத்துயிர் அளிப்பதற்கு மேல்முறையீடு செய்வதற்கு ஆலய  நிர்வாகத்திற்கு  சங்கங்களின் பதிவு அலுவலகம் 30 நாள் காலக்கெடுவை வழங்கியிருந்தது.

இந்நிலையில் இந்த காலக்கெடு முடிவடைவதற்கு இன்னும் மூன்று தினங்களே எஞ்சியுள்ள நிலையில் அதன் எதிர்கால நிலை பெரும் கேள்விக்குறியாகியுள்ளது.

இது  தொடர்பாக ஆலயத்தின் பொருளாளர் டத்தோ கே. தமிழ்ச்செல்வத்துடன் திசைகள் தொலைக்காட்சி தொடர்புகொண்ட போது, ஆலய  பதி​வு ரத்தை எதிர்த்து நிர்வாகத்தின் மேல்முறையீட்டை சங்கங்களின் பதிவு அலுவலகத்தில் சமர்ப்பித்து விட்டதாகவும் நல்ல முடிவு கிடைக்கும் என்று தாங்கள் எதிர்பார்ப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.