ஹராப்பான் கூட்டணியின் குடும்ப வாரிசுகளின் குத்தாட்டம்! குதுகலம்!! கும்மாளம்!!!

0
200

ஹராப்பான் கூட்டணியில் தற்போது தலைத்தெறிக்க ஓடிக்கொண்டிருப்பது குடும்ப அரசியலாகும்!

அந்த கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் துன் மகாதீர்,அவருக்கு அடுத்து   ,அவரின் மகன் டத்தோஸ்ரீ முக்கீரிஸ் மகாதீராகும்,அம்னோவில் தனது மகனை பிரதமராக்க முயன்று தோற்றுப்போன ஆற்றாமையில்,ஹராப்பான் கூட்டணியிலாவது  அது; சாத்தியப்படுமா என்று மகாதீர் ஆழம் பார்க்கிறார்.;

தமது 22 ஆண்டுக்கால ஆட்சியில், தனது இன்னொரு மகனான ஜைனி மகாதீரை, நாட்டின் ஏழாவது கோடீஸ்வரராக்கிய  மகாதீர் ;அடுத்து ஜைனியை நாட்டின் முதலாவது கோடீஸ்வரராக்க , தூரநோக்கு  அடிப்படையில்  வகுத்துள்ள திட்டமே; அடுத்த ஆட்சி மாற்றத்திற்கான முழக்கமாகும்!

அடுத்து வருபவர் டத்தோஸ்ரீ அன்வாராகும், இவர் மகாதீருக்கான எதிர்ப்பைப் புலப்படுத்தவே கெஅடிலானைத்  துவக்கினார். இவர் ஓரினப்புணர்ச்சியில் ஈடுப்பட்டார் என்றும், தமது அதிகாரத்தைத் தவறாகப்பயன்படுத்தினார் என்பதுமான குற்றச்சாட்டில் ,மகாதீர் ஆட்சிக்காலத்தில் சிறைக்கு அனுப்பட்டார். அதன் பின்னர் ,துன் அப்துல்லா படாவி ஆட்சிக்காலத்தில் விடுவிக்கப்பட்டார். அதன் பின்னர் தமது உதவியாளரிடம் மீண்டும் ஓரினப்புணர்ச்சியில் ஈடுப்பட்டார் என்ற குற்றச்சாட்டில் இப்போது சிறையில் இருக்கிறார்.

இவருக்கு அடுத்து அவரின் மனைவி டத்தீன்ஸ்ரீ வான் அசிசா கெஅடிலான் தலைவரானார், அதையொட்டி நாடாளுமன்ற உறுப்பினரானார்,அவருடனேயே அவரின் மகள் நூருல் ஈசாவும் நாடாளுமன்ற உறுப்பினரானார். அதேவேளை கட்சியின் உதவித்தலைவராகவும் உள்ளார். அதன் வழி, ஏறக்குறைய தமது குடும்பக்கட்சியாக கெஅடிலானை வசப்படுத்தியுள்ளார் அன்வார்.

அடுத்து தோழர் லிம் கிட்சாங்! அவர்  ஜசெகவின் அதிகார மையமாகவே இன்னும் திகழுகிறார்.நீண்ட கால நாடாளுமன்ற உறுப்பினர். அதேபோன்று நீண்ட காலமாக அக்கட்சியின் பொதுச்செயலாளர், தற்போது அவருக்கு அடுத்து தமது வாரிசாக  மகன் தோழர் லிம் குவாங் எங்கை கட்சியின் பொதுச்செயலாளராக்கியதோடு மட்டுமல்லாமல்;

பினாங்கு முதல்வராகவும் வசப்படுத்தியுள்ளார். அஅதோடுமல்ல தொடர்ந்து நாடாளுமன்ற, சட்டமன்ற  பதவிகளில் அமர்த்தப்பட்டுள்ளார். எனவே, என்னதான் ஜசெக  பலயின மக்களுக்கானது என்ற தோற்றம் கொடுக்கப்பட்டாலும்,

அது இன்னும்  சீனர்களுக்கான கட்சிதான் என்பதை அக்கட்சியின் ஆண்டுக்கூட்ட தேர்தலின் போது;இந்தியர்களையும் மலாய்க்காரர்களையும் தோற்கடிப்பதிலிருந்து உணர முடிகிறது. அதனால் ஜசெக ஏறக்குறைய லிம்மின் குடும்பக்கட்சியாக நூற்றுக்கு நூறு மாறிவிட்டது.

அதேவேளை அதிலுள்ள இந்தியர்கள் லிம்களின் கொத்தடிமைகளாகவும் ஆகிவிட்டார்கள் என்பதும் அருவறுக்கத்தக்க விசயமாகும்..இவர்கள் பொதுவெளியில் பேசுகிற ஜனநாயகத்தைக்கூட, தங்கள் கட்சிக்குள் ஒலிப்பதில்லை. ஊமைகளாக செவிடர்களாக நீண்ட காலமாகவே இருந்து வருகிறார்கள்.

அதேவேளை ஜசெவில் கர்பால் சிங் தலைவராகயிருந்த போது தமது மகன்களை அரசியலில் புகுத்தினார் .,தமது மூத்தமகனான., கோவிந்சிங்கை நாடாளுமன்றத்திற்கும், தமது இளைய மகனான ஜாகிட் சிங்கை பினாங்கு சட்டமன்றத்திற்கும் கொண்டு வந்தார். அவர் மறைவுக்குப்பிறகு,  இன்னொரு மகனான ராம்சிங்  நாடாளுமன்ற உறுப்பினராகியுள்ளார். அதாவது  ஜசெகவில் கர்பாலின் குடும்ப அரசியலில் தலையெடுத்துள்ளதோடு மட்டுமல்ல ,அரசியல் பொது வெளியில்  இந்திய சமுதாயத்தின் இன அடிப்படையிலான பிரதிநிதித்துவத்தையும் ஜசெகவில் முன்னெடுத்துள்ளது. கர்ப்பால் குடும்பமாகும்.

அப்படியென்றால் ஜசெகவில் கொத்தடிமைகளாகயிருந்து வருகின்ற தோழர்களான, குலசேகரன், இராமசாமி, சிவக்குமார், கணபதிராவ்,சிவநேசன் போன்றவர்கள் இந்தியர்களின், குறிப்பாக தமிழர்களின் பிரதிநிதிகள் அல்ல;  என்பதை அப்பட்டமாக இந்நடிவடிக்கை அம்பலப்படுத்தியுள்ளது. அதோடுமட்டுமல்ல, ஹராப்பான் நடத்துகிற பொதுக்கூட்டங்களிலெல்லாம் இந்தியர் கோட்டாவில்

கோவிந்சிங்கே மட்டுமே பேசிவருவதாலே, குலசேகரன் போன்ற கூஜாக்கள் கிட்சாங்கின் தாஜாவாகவே இருந்து வருகின்றனர்.

இதேநிலைபாடுதான் கெஅடிலானிலும், சிவராசா, சேவியர், சுரேந்திரன், மணிவண்ணன் உள்ளிட்ட சிலர், இந்தியர்கள் போல அறியப்பட்டாலும்,அந்த கட்சியிலே இன ரீதியிலான பிரதிநிதித்துவம், அல்லது ஒர் இனத்தின் பிரச்சனைகளையும் உரிமைகளையும் யாரும் வெளிப்படுத்தக்கூடாதென்ற கட்டளையும் இடப்பட்டுள்ளது.அதாவது அந்த கட்சி எல்லா இனங்களுக்குமான கட்சியாம்? அது, ஒவ்வொரு இனத்துக்கான தனிதனி பிரதிநித்துவம் கொண்ட கட்சியல்லவென்று பதுக்கி ,விலக்கி வைக்கப்பட்டுள்ளது.

அதனால்; ஆட்சிமாற்றம் வேண்டுமென்று விரும்புகின்ற இந்தியர்கள் ,அரசு இயந்திரந்தின் மூலம் தங்களின் வாழ்வாதாரத்தையும்,அடிப்படையிலான உரிமைகளையும் மீட்டெடுக்க விரும்பினால்,இதுவரை ஆட்சியில் பழக்கப்படாத குதிரையிலே ஏறி சவாரி செய்து கீழே விழுந்து மண்ணைக்கவ்வுவதைவிட, பழக்கப்பட்ட குதிரையில் ஏறியாவது ஏதும் காயம் ஏற்படாமல் தப்பிப்பிழைக்க முடியுமா என்று யோசித்து முடிவெடுக்க வேண்டிய நேரம் இதுவென்று உணர வேண்டிய நேரம் வந்துவிட்டது.

ஏதோ தேசிய அரசியலில் மாற்றத்திற்கு வித்திடப்போகிறோம் என்ற மமதையில்,  தப்பும் தவறுமாக -மகாதீர்- அன்வார்- லிம்கிட்சாங்- கர்ப்பால் சிங் குடும்பங்களை அரசு அரியணையில் ஏற்றி வைத்துவிட்டு, ம இ காவை கவிழ்த்து விட்டு, இருக்கிறதையும் இழந்து விட்டோமே, என்று கண் கெட்டப்பிறகு சூரிய வணக்கம் செய்து ஆகப்போவதொன்றுமில்லையென்று உணர்ந்தால் நல்லதென்றே உணர்த்துகிறோம்.

திசைகளுக்காக

உங்கள் சாணக்கியன் 26/3/18

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here