ஹாங்காங்கில் வலுக்கும் போராட்டம்

0
33

சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஹாங்காங்கில் மீண்டும் மிகப்பெரிய போராட்டம் வெடித்தது. பல்லாயிரக்கணக்கானோர் முகமூடி அணிந்து கொண்டு சாலைகளில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு, தடியடி, கண்ணீர் புகை குண்டு வீச்சு மற்றும் துப்பாக்கிச் சூட்டில் முடிந்தது.

ஹாங்காங்கின் தன்னாட்சியில் சீனா தலையிடுவதை நிறுத்துதல், சுதந்திரமாக தேர்தல், போராட்டக்காரர்களை தாக்கிய போலீசார் மீது விசாரணை மேற்கொள்ளுதல், கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள போராட்டக்காரர்களை நிபந்தனையின்றி உடனடியாக விடுதலை செய்தல் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் உச்சக்கட்டத்தை எட்டியது.

போலீசார் தங்கள் அடையாளங்களை கண்டுபிடித்துவிடக்கூடாது என்பதற்காக போராட்டக்காரர்கள் முகமூடிகளை அணிந்துகொண்டு போராடி வருகின்றனர். இப்படி முகமூடிகளை அணிந்து போராட்டத்தில் ஈடுபடுபவர்களை கட்டுப்படுத்த புதிய நடவடிக்கையை ஹாங்காங் அரசு அறிவித்தது.
இதனால் ரெயில்கள், பஸ்கள் உள்ளிட்ட பொது போக்குவரத்து முற்றிலுமாக முடங்கியது. அரசு அலுவலகங்கள், வங்கிகள் மற்றும் தனியார் விற்பனை கூடங்கள் அடித்து, நொறுக்கி சூறையாடப்பட்டன. பல பகுதிகளில் வாகனங்கள், கடைகள் எரிக்கப்பட்டதால் அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.