‘ஹீரோ’ தலைப்பால் மீண்டும் சர்ச்சை

0
17

மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், கல்யாணி ப்ரியதர்ஷன், அர்ஜுன், அபய் தியோல் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘ஹீரோ’. கே.ஜே.ஆர் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்து வருகிறது. டிசம்பர் 20-ம் தேதி இந்தப் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ட்ரைபல் ஆர்ட்ஸ் நிறுவனம் கே.ஜே.ஆர் நிறுவனத்துக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இது தொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “‘ஹீரோ’ என்ற எங்களது தலைப்பில் ஆனந்த் அண்ணாமலை இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா மற்றும் மாளவிகா மோகனன் நடிப்பில் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் உள்ளிட்ட ஐந்து மொழிகளில் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இது தொடர்பான செய்திகள் பத்திரிகை, தொலைக்காட்சி, மற்றும் அனைத்து ஊடகங்களிலும் வெளிவந்துள்ளன  ‘ஹீரோ’ என்ற தலைப்பில் போஸ்டர்களை வெளியிட்டனர். ஆகவே இந்தக் கடிதத்தின் வாயிலாக கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பு நிறுவனத்திற்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.