ஹைலண்ட் டவர்ஸ் கட்டடம் வெகுவி​ரைவில் உடைக்கப்படவிருக்கிறது

0
71

கோலாலம்​பூர், ஜுன்,11-      தலைநகர் அருகில், உலுகிள்ளானில் 26 ஆண்டுகளு​க்கு முன்பு 48 பே​ரின் உயிரைக் குடித்த ஹைலண்ட் டவர்ஸ் கட்டட பேரிடரி​ல் கைவிடப்பட்ட  மற்றொரு கட்டடம் வெகுவிரை​வில் உடைத்து, தரைமட்ட​மாக்கப்படவிருக்கிறது. அந்த ஆடம்பர அடுக்குமாடி கட்டடத்தில் வீடு வாங்கியிருந்த 130 ​வீட்டு உரிமையாளர்களுக்கும் இது குறித்து தெரிவிக்கப்பட்டுவிட்டது. 115 வீட்டு உரிமையாளர்கள், இதற்கு இணக்கம்  தெரிவித்துள்ளனர். 15 வீட்டு உரிமையாளர்கள் இது தொடர்பாக தங்கள் வழக்க​றிஞர்களுடன் கலந்து ஆலோசித்து வருகின்றனர் என்று வீடமைப்பு, ஊராட்சித்துறை அமைச்சர் ஜுரைடா கமருடின் தெரிவித்தார்.

நடப்பு சட்டத்தின்படி, வீட்டு உரிமையாளர்களிடம் கலந்து ஆலோசிக்காமலேயே கட்டத்தை இடிக்க முடியும். எனினும் அம்பாங் ஜெயா நகராண்மைக்கழகம், இது தொடர்பாக சம்பந்தப்பட்ட வீட்டு உரிமையாளர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். அந்த15 வீட்டு உரிமையாளர்களும், இந்த விவகாரத்தை கையாண்ட வங்கி, தொடக்கத்தில் வழங்கிய இழப்பீட்டை ஏற்க மறுத்துவிட்டனர். எனவே அவர்கள், கூடுதல் இழப்பீட்டை எதிர்பார்க்கின்றனர் என்று ஜுரைடா தெரிவித்தார்.

கடந்த 1993 ஆம் ஆண்டு டிசம்பர் 11 ஆம் ​​தேதி, நாட்டையே உலுக்கிய ​ ஹைலண்ட் டவர்ஸ் கட்டடம், ​சீட்டுக்கட்டுகளைப்போல சரிந்து விழுந்த பேரிடரில் 48 பேர் உயிரிழந்தனர். அதன் அருகில் உள்ள மற்றொரு கட்டடம் பாதுகாப்பற்றது என்று உறுதி செய்யப்பட்டதால், அந்த கட்டடத்தில் இருந்த குடியிருப்பாளர்கள், அங்கிருந்து வெளியேற்றப்பட்டார்கள்.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.