1 மில்லியன் கள்ள நோட்டுகள் பறிமுதல்

0
288

நீலாய், கம்போங் ஜிஜான் தெங்காவிலுள்ள ஒரு வீட்டில் போலீஸார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் ரிம1.41 மில்லியன் மதிப்பிலான மலேசிய ரிங்கிட், அமெரிக்க டாலர்களை உட்படுத்திய கள்ல நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன என நெகிரி செம்பிலான் மாவட்ட தலைமை போலீஸ் அதிகாரி டத்தோ நூர் அஸாம் ஜமாலுடின் தெரிவித்தார். சம்பந்தப்பட்ட அவ்வீட்டில் போதைப் பொருள் விநியோகம் மற்றும் போதைப் பொருள் உட்கொள்ளும் நடவடிக்கைகள் நடைபெறுவதாக பெறப்பட்ட தகவலைத் தொடர்ந்து, அவ்வீட்டிற்கு போலீஸார் சோதனை மேற்கொண்டனர். அச்சோதனையின்போது 10.91 ஷாபு வகை போதைப் பொருளைக் கைப்பற்றிய போலீஸார், 21 வயது முதல் 37 வயதிற்குட்பட்ட ஐவரை கைது செய்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here