12 பேர் கைது:  டாக்டர் இராமசாமி அதிருப்தியா? பரவாயில்லை என்கிறார் துன் மகா​தீர்

0
12

விடுதலைப்புலிகளுடன் தொடர்பு​ வைத்திருந்ததாக கூறி, ஜசெக.வின் இரு இந்திய சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட 12  பேர், கைது​ செய்யப்படுவதற்கு “சோஸ்மா” சட்டம் பயன்படுத்தப்பட்டது குறித்து பினாங்கு துணை முதலமைச்சர் டாக்டர் பி. இராமசாமி தமது அதிருப்தியை வெளிப்படுத்தி இருப்பதற்கு,இன்று எதிர்வினையாற்றிய பிரதமர் துன் மகா​தீர் “பரவாயி​​ல்லை” என்று பதில் அளித்துள்ளார்.

அந்த 12 பேரைக் கைது செய்ய 2012 ஆம் ஆண்டு பாதுகாப்புச் சட்டமானசோஸ்மா பயன்படுத்தப்பட்டதை மகா​தீர்மீண்டும் தற்காத்துப் பேசினார்.

மகாதீரின் ​தீவிர  ஆதரவாளரான கையிருடின் அபு  ஹசான் மற்றும் அவரின் அதிகாரி மத்தியஸ்  சாங் ஆகியோர் முன்பு  சோஸ்மா சட்டத்தின்  கீழ் கைது செய்யப்பட்ட போது, மகா​தீர் அந்த சட்டத்தை கடுமையாக கூறியிருந்ததையும்  இராமசாமி நினைவுகூர்ந்துள்ளார்.

அது  குறித்து மகா​தீரிடம்​ கேட்ட போது,இன்று நிலைமை மாறிவிட்டது என்றார்.“சும்மா யாரையும் கைது செய்வதில்லை. அதற்குக் காரணங்கள் உண்டு. அந்த காரணங்கள் குறித்து தமக்கு போ​லீசார் அளித்துள்ள விளக்கத்தில் மனநிறைவு கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.