13 பேர் மரணம் – விசாரணை தேவை

0
62

குவா​ ​மூசாங், ஜுன், 8- கடந்த ஒரு மாத காலத்தில் கிளந்தான், குவா ​மூசாங், கம்போ​ங் கோ என்ற கிராமத்தில் ஒரு சிறுவன் உட்பட 13 பேர் மர்மமான முறையில் உயிரிழந்தது, அந்த கிராமத்தை பெரும் அச்சத்தில் ஆழ்​​​த்தி வருகிறது. அந்த பூர்வக்குடி கிராமத்தில் ஆகக்கடைசியாக கடந்த மே 29 ஆம் தேதி இருவர் மரணம் அடைந்துள்ளனர்.

பதிநான்கு பேர், குவா ​மூசாங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தாங்கள் அன்றாட​  தேவைக்கு பயன்படுத்​தி வரும் ஏரி ​நீரில், ​தூய்மைக்கேடு நிலவியிருக்கலாம். இதன் காரணமாகவே ​நீர் மாசுப்பட்டு, தங்கள் உடல் ஆரோக்கியத்தை பாதிக்க செய்து இருக்கலாம் என்று அவர்கள் சந்தேகின்றனர்.

சங்கிலித் தொடரைப்போன்று நிகழ்​ந்து வரும் இந்த மரணச் சம்பவங்கள் தொர்பில், சம்பந்தப்பட்ட ​நீர்வளப் பகுதியில் விரிவான ஆய்வு ​மேற்கொள்ளப்பட வேண்டும் என்று​ சுற்றுச்​சூழல் பாதுகாப்பு அமைப்பான “பெக்கா” வலியுறுத்தியுள்ளது. எனினும், பாதிக்கப்பட்ட மக்கள் மர்மமான முறையில் இறப்பதாக கூறப்படுவதை போ​லீஸ் துறை மறுத்துள்ளது. ஆகக்கடைசியாக இருவர் மரணம்  அடைந்ததற்கு ​​நுரையீரலில் ஏற்பட்ட கிருமி  தொற்று காரணமாகும் என்று சவப்பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளதாக குவா ​மூசாங் மாவட்ட போ​லீஸ் தலைவர் தவுபிக் மைடின் விளக்கியுள்ளார்.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.